தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”பயிர் காப்பீட்டுத் தொகையை பருவ காலத்திலேயே வழங்கவேண்டும்” - ஜி .கே. வாசன் - erode distric news

விவசாயிகளின் பயிர் காப்பீடு இழப்பீட்டை அந்தந்த பருவத்திலேயே தமிழ்நாடுஅரசு வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

ஜி கே வாசன் செய்தியாளர் சந்திப்பு
ஜி கே வாசன் செய்தியாளர் சந்திப்பு

By

Published : Jul 9, 2021, 7:15 PM IST

ஈரோடு : பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று (ஜூலை.09) செய்தியாளர்களை சந்தித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

அப்போது பேசிய அவர், ”பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதித்துள்ளது. இதற்கு உற்பத்தி செய்யும் நாடுகள் உடனடியாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த டீசல்,பெட்ரோல் விலை உயர்வால் உலகளவில் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்கொள்முதல் விரைவாகச் செய்ய வேண்டும்

நெல்கொள்முதல் நிலையங்களில் தண்ணீர் தேங்கியது தொடர்பாக தற்போது பிரச்னை எழுந்துள்ளது. அரசு விவசாயிகளை மாதக்கணக்கில் காத்திருக்க விடாமல் நெல் கொள்முதலை விரைவாகச் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க கூடிய பயிர் காப்பீட்டு தொகையை அந்தந்த பருவ காலத்திலேயே வழங்கவேண்டும்.

விவசாயிகள் மின் இணைப்பு பெரும் நடைமுறையை எளிதாக்க வேண்டும். மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் காலதாமதமின்றி பயிர்க் கடன்கள் வழங்க வேண்டும்.விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள் அனைத்திற்கும் முழுமானியம் வழங்க வேண்டும்.

டீசலுக்கு மானியம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய அறுவடை இயந்திரம், நடவு இயந்திரம் வாடகை இருமடங்காக உயர்ந்துள்ளது. இதனால் டீசலுக்கு மானியம் வழங்கி விவசாயிகளுக்கு உதவிக்கரமாக இருக்க வேண்டும்.

ஜி கே வாசன் செய்தியாளர் சந்திப்பு

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் :

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதில் முனைப்போடு இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையுள்ளது. எனவே மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் தமிழ்நாட்டை கேட்காமல் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். இந்தக் கருத்தையே ஒன்றிய அரசு உறுதியோடு இருக்க வேண்டும்”எனக் கூறினார்.

இதையும் படிங்க: பத்து கிலோமீட்டர் நடந்து சென்று கிராம மக்களை சந்தித்த எம்எல்ஏ!

ABOUT THE AUTHOR

...view details