ஜி.எஸ்.டியை 5 விழுக்காடாக குறைக்க வேண்டும் - ஜி.கே. மணி - State President GK Mani congratulates Tamilisai sowndarajan
ஈரோடு: சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 28 விழுக்காடு ஜி.எஸ்.டியை 5 விழுக்காடாக குறைக்க வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார்.
ஜி கே மணி செய்தியாளர்கள் சந்திப்பு
ஈரோடு மாவட்டம் வாணியம்பாடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, ”தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றதற்காக பாமக சார்பாக வாழ்த்துகளையும், இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி மறைவுக்கு பாமக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வேலூர் மாவட்டத்தை மூன்று மாவட்டங்களாக பிரித்ததை வரவேற்கிறோம். நிர்வாக வசதிக்காகவும், அரசின் நலத்திட்டங்கள் வேகமாக மக்களுக்கு சென்றடையவும் சேலம், மதுரை, திருவண்ணாமலை போன்ற பெரிய மாவட்டங்களையும் பிரிக்கவேண்டும்.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு ஆங்காங்கே தடுப்பணை கட்டி உள்ளதால் நீர் வரத்து குறைந்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை மத்திய அரசு தலையிட்டு ஒரு தீர்வுக்கு கொண்டு வரவேண்டும்’ என்றார்.