தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடு வாடகைக்கு கேட்பது போல் மூதாட்டியிடம் செயின் பறிப்பு - இளம்பெண் கைது - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே வீடு வாடகைக்கு கேட்பது போல சென்று மூதாட்டி கழுத்தில் இருந்த செயினை பறித்த இளம்பெண்ணை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

இளம்பெண் கைது
இளம்பெண் கைது

By

Published : Aug 20, 2020, 8:37 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டி 2ஆவது வீதியைச் சேர்ந்தவர் மசிரியம்மாள் (75). இவர் வீட்டில் தனியார் இருந்துள்ளார், அப்போது இளம்பெண் ஒருவர் மசிரியம்மாளின் வீட்டுக்குள் சென்று வீடு வாடகைக்கு வேண்டும் என கேட்டுள்ளார்.

வீட்டில் எவரும் இல்லை என்பதை அறிந்த அப்பெண் திடீரென மசிரியம்மாளின் கழுத்திலிருந்த 4 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மசிரியம்மாள் சத்தம் போட்டுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்தப் பெண்ணை துரத்திப்பிடித்து புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்தப் பெண் புஞ்சைபுளியம்பட்டி பன்னீர்செல்வம் வீதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவருடைய மனைவி ஆனந்தி (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து மசிரியம்மாள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் ஆனந்தி மீது வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details