தெலங்கானா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சரின் உத்தரவுப்படி ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1 லட்சம் போர்வைகள் 6 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.
நீட் தேர்வு விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் - ஈரோடு மாவட்டச் செய்திகள்
ஈரோடு: நீட் தேர்வு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
![நீட் தேர்வு விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் NEET selection Minister Senkottayan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9281167-715-9281167-1603432709397.jpg)
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் காலத்தை நீடிக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஆயுள் காலத்தை நீட்டித்து பரிந்துரை செய்துள்ளது. நீட் தேர்வில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உள்பட அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் நல்ல முடிவு கிடைக்கும்" என்றார்.
இதையும் படிங்க:”நாடே வியக்கும் அளவிற்கு ஒரு அறிவிப்பு வரும்” - அமைச்சர் செங்கோட்டையன்