ஈரோட்டில் கரோனா ஊரடங்கு காரணமாக பேருந்து நிலையத்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை கடைகளை மாவட்ட நிர்வாகம் மாற்றியது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக பேருந்து இயங்க தொடங்கியுள்ளது.
மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பழ வியாபாரிகள் போராட்டம்! - பழ வியாபாரிகள் போராட்டம்
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பழ வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வ.உ.சி., பூங்காவில் ஒரு பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் கடைகள் அமைக்கபட்டு வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இதில் பழங்களை வியாபாரம் செய்ய கடைகளை அமைத்து வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் வழங்கினார்கள். இது குறித்து பழ வியாபாரிகள் கூறுகையில், “அரசியல் தலையீடு காரணமாக பழங்களை விற்பனை செய்ய கடைகளை ஒதுக்கீடு செய்யவில்லை. பழங்கள் விற்பனை செய்ய கடைகளை ஒதுக்கீடு செய்யாவிட்டால் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.இதையும் படிங்க: வலையில் அதிகம் சிக்கிய மத்தி மீன்கள் - மகிழ்ச்சியில் மீனவர்கள்