தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 6, 2021, 6:34 AM IST

ETV Bharat / state

சுதந்திர போராட்ட தியாகி ராமகிருஷ்ணன் மனைவி காலமானார்!

ஈரோடு: சுதந்திர போராட்ட தியாகி ராமகிருஷ்ணன் மனைவி சரஸ்வதி அம்மாள் (94) உடல்நலக்குறைவால் நேற்று (ஜன.5) காலமானார்.

ராமகிருஷ்ணன் மனைவி காலமானார்
ராமகிருஷ்ணன் மனைவி காலமானார்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பழைய தபால் ஆபிஸ் வீதியைச் சேர்ந்தவர் சுதந்திர போராட்ட தியாகி ராமகிருஷ்ணன். வெள்ளையரை எதிர்த்து போராடிய போது இவர் கொடி காத்த குமரனுடன் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்.

இவருக்கு தியாகபறவை என்ற பெயரும் உண்டு. சுதந்திர போராட்ட தியாகி ராமகிருஷ்ணன் கடந்த 2000ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது மனைவி சரஸ்வதியம்மாள் சத்தியமங்கலத்தில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக உடல்நலம் சரியில்லாத காரணத்தால் சரஸ்வதியம்மாள் (96) நேற்று காலமானார். இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு கரிக்கோல் ராஜ் மரியாதை!

ABOUT THE AUTHOR

...view details