சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 215ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் பொல்லான் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பொல்லான் நினைவு தினம்: அரசியல் கட்சியினர் மரியாதை - freedom fighter bollan memorial day
ஈரோடு: சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
freedom fighter bollan memorial day party leaders tribute
அதேபோல், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் போர்ப் படைத் தளபதியும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான பொல்லானின் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.