தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவச வேட்டி சேலை பதுக்கல் - வருவாய் துறையினர் விசாரணை! - தமிழ்நாடு அரசின் விலையில்லா வேட்டி சேலை

ஈரோடு : பழைய துணிகள் விற்பனை நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் விலையில்லா வேட்டி சேலைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இலவச வேட்டி சேலை பதுக்கல் - வருவாய் துறையினர் விசாரணை!
இலவச வேட்டி சேலை பதுக்கல் - வருவாய் துறையினர் விசாரணை!

By

Published : Nov 3, 2020, 1:34 AM IST

ஈரோடு அருகேயுள்ள திருநகர்காலனி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பழைய துணிகள் விற்பனை செய்யும் நிலையத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக உற்பத்தி செய்யப்பட்ட விலையில்லா வேட்டி சேலைகள் பதுக்கி வைத்திருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இத்தகவலின்பேரில் ஈரோடு வருவாய்த்துறை அலுவலர் குழுவினர் திருநகர்காலனி பகுதியில் பழைய துணிகளை விற்பனை செய்யும் நிலையத்தை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வரும் சண்முகம் என்பவரது கடையில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனை நிலையத்தில் பழைய துணிகளுக்கிடையே பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொங்கல் பண்டிகைக்காக விநியோகம் செய்ய உற்பத்தி செய்யப்பட்ட விலையில்லா வேட்டி சேலைகள், அரசின் முத்திரைகளுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து பழைய துணிகளுக்கிடையே இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட விலையில்லா வேட்டி சேலைகளைப் பறிமுதல் செய்த அலுவலர் குழுவினர், கடை உரிமையாளர் சண்முகத்திடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தங்களுக்கு பழைய துணிகள் மூட்டைகளுடன் வந்ததாகவும், அதில் விலையில்லா வேட்டி சேலைகள் இருந்தது தனக்குத் தெரியாது என்றும், பழைய துணிகளுடன் கலந்து ஒட்டுமொத்தமாக அவை வந்து சேர்ந்ததாகவும்சண்முகம் பதில் தெரிவித்தார்.

ஆனால் இந்த பதிலை ஏற்றுக் கொள்ளாத வருவாய் துறையினர், அவருக்குத் துணி மூட்டைகளை விற்பனைக்காக வழங்கியவர்கள் குறித்தும், தமிழ்நாடு அரசின் விலையில்லா வேட்டி சேலைகள் கிடைத்தது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details