ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றியத்தில், குமரகுரு வேளாண்மை கல்லூரி ஜெ.கே.கே முனிராஜா வேளாண்மை கல்லூரி, கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 30 மாணவ மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வந்து தங்கியுள்ளனர்.
இந்த கிராம தங்கல் திட்டத்தின் பத்தாம் நாளான இன்று (பிப்.24) தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில், கால்நடைகளுக்கு குடல்புழு அகற்றுதல், பருவத்தில் சினை ஊசி போடுதல், கால்நடைகளுக்கு பசுத்தீவனம், உலர் தீவனங்களை எவ்வாறு அளிக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு விதங்களில் கால்நடை பராமரிப்பு குறித்து கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.