ஈரோடு வெடிபாளையம் பகுதியில் வருவாய்த்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, நாமக்கல் மாவட்டம் துறையூரில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலையை ஈரோட்டிற்கு கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது.
வாகனத்தணிக்கையில் இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல்! - வாகனத்தணிக்கை
ஈரோடு: வாகனத் தணிக்கையின் போது இலவச வேட்டி, சேலைகள் கடத்தப்பட்டதை வருவாய் துறையினர் கண்டறிந்து, பறிமுதல் செய்தனர்.

வாகனத்தணிக்கையில் இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல்
இதையடுத்து, வட்டாச்சியர் பாலசுப்பிரமணியன் கடத்தி கொண்டுவரப்பட்ட ஒரு டன் சேலையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தார். மேலும் வாகன ஓட்டுநரிடம் இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பறிமுதல் செய்யப்பட்ட இலவச வேட்டி, சேலைகள்