தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம் காவலாளியை தாக்கிய நான்கு பேர் கைது! - four members who attacked ATM security arrested in erode

ஈரோடு: ஏடிஎம்மில் காவலாளியை தாக்கிவிட்டு சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலை கைதுசெய்தனர்.

four members who attacked ATM security arrested in erode
four members who attacked ATM security arrested in erode

By

Published : Jun 20, 2020, 12:53 PM IST

ஈரோடு திருநகர்காலனி பகுதியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஏடிஎம் செயல்பட்டுவருகிறது. நேற்று முன்தினம் (ஜூன் 18) இரவில் ஏடிஎம்மில் காவலாளி கார்த்திகேயன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பணம் எடுக்க நான்கு பேர் வந்து ஒரே நேரத்தில் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்துள்ளனர். இதனால் கார்த்திகேயன் நால்வரையும் அழைத்து ஒருவர் ஒருவராகச் சென்று பணம் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதையடுத்து குடிபோதையில் இருந்த நான்கு பேரும் காரத்திக்கேயனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் படுகாயம் அடைந்த கார்த்திகேயன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இச்சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் ஈரோடு கிருஷ்ணம் பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட விக்னேஷ், தேவா, முரளிதரன் ஆகிய நான்கு பேரை கைதுசெய்தனர்.

இதையும் படிங்க... முன்னாள் மேயர் வீட்டில் பணிபுரிந்த காவலாளி உயிரிழப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details