தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தை விற்பனை: இடைத்தரகர்கள் நான்கு பேர் கைது! - குழந்தை விற்பனை விவகாரம்

ஈரோடு: அக்ரஹாரம் பகுதியில் குழந்தை விற்பனை செய்த விவகாரத்தில் இடைத்தரகர்களான மூன்று பெண்கள் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

four accused arrested for sale baby
four accused arrested for sale baby

By

Published : Dec 9, 2020, 6:06 PM IST

ஈரோடு மாவட்டம் அக்ரஹாரம் பகுதியில் குழந்தையை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வதாக 1098 என்ற எண் மூலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களுக்கு புகார் வந்துள்ளது.

பின்னர், சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் உதவியுடன் குழந்தைகள் நல அலுவலர்கள் விரைந்தனர். இதையடுத்து, அக்ரஹாரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் கோவையைச் சேர்ந்த சங்கரேஸ்வரி, சேலத்தைச் சேர்ந்த மோகனபப்ரியா, கோகிலா, பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் சட்ட விரோதமாக குழந்தையை வாங்க வந்ததும், இதுவரை இவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்துள்ளதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கருங்கல்பாளையம் காவல் துறையினர் மூன்று பெண்கள் உள்பட நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 3 மாத கைக்குழந்தை விற்பனை: மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details