ஈரோடு மாவட்டம் பவானி ராயல் தியேட்டர் இரண்டாவது வீதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (எ)மெட்ராஸ் மணி (50). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சூதாட்ட கிளப் வைத்து நடத்தி வந்துள்ளார். தற்போது சூதாட்டம் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இவர் மீது கடந்த 2008 ஆம் ஆண்டு கொலை வழக்கும் ஒன்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அவர் தனது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார். இது குறித்து அருகிலிருந்தவர்கள் பவானி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.