தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு கிழக்கில் தனித்து களமிறங்கும் அதிமுக - கே.ஏ.செங்கோட்டையன் தகவல் - அதிமுக

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்தே களம் இறங்கி இருக்கின்றோம், கூட்டணியில் யார் யார் வருகிறார்கள் என்பது இரண்டு மூன்று நாட்களில் தெரியவரும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கில் தனித்து களமிறங்கும் அதிமுக - கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
ஈரோடு கிழக்கில் தனித்து களமிறங்கும் அதிமுக - கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

By

Published : Jan 28, 2023, 4:13 PM IST

Updated : Jan 29, 2023, 5:08 PM IST

ஈரோடு கிழக்கில் தனித்து களமிறங்கும் அதிமுக - கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிராமணர் பெரிய அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற அதிமுகவின் கிளைக் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.சண்முகநாதன், கே.வி.ராமலிங்கம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் இடைத்தேர்தல். தேர்தல் களத்தில் முடிவுகள் எப்படி வருகிறது என்பதை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த தேர்தலைப் பொறுத்தவரை ஒரு பெரிய மாற்றத்தை எதிர்காலத்தில் உருவாக்கும் தேர்தலாக அமையும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக சந்திக்கும் தேர்தல் களம் திண்டுக்கல் தேர்தலை போல வெற்றி பெறும். தேர்தல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதிமுக இந்த தேர்தலில் தனித்தே களம் இறங்கி இருக்கின்றோம். கூட்டணியில் யார் யார் வருகிறார்கள் என்பது இரண்டு மூன்று நாட்களில் தெரியவரும். இந்த வெற்றி என்பது ஒரு சரித்திரம் படைத்த வெற்றியாக இருக்கும். அணிகள் பிரிந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் 98.5 சதவீதம் பேர் எங்களுடன் தான் இருக்கிறார்கள். சரித்திரம் படைக்கும் வெற்றியாக இந்த கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி இருக்கும்.

நேற்று முதல் களப்பணியை தொடங்கி விட்டோம் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருக்கக்கூடிய நிர்வாகிகள் களத்தில் இறங்கித் தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டனர். அமைதியான முறையில் இந்த தேர்தல் பணியில் ஈடுபடுவோம். இரட்டை இலை சின்னம் குறித்து இரண்டு மூன்று நாட்களுக்குள் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை எங்களுக்குச் சின்னம் கிடைக்க முழுமையாக வாய்ப்பிருக்கிறது என நம்புகிறோம்.

களப்பணிகளில் அதிமுக என்றும் சோர்ந்ததில்லை. பாஜக கூட்டணிக்கு வருவதை பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பாருங்கள். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திக்கும் பணியை தொடங்கி இருக்கின்றோம். மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதையும் ஆய்வு செய்து வருகின்றோம்.

இஸ்லாமிய பெருமக்களுக்கு அதிமுக பல்வேறு உதவிகளைச் செய்திருக்கிறது ஹஜ் பயணத்திற்குச் செல்பவர்களுக்கான நிதி, பள்ளிவாசலைச் சீரமைப்பதற்கு நிதி, ரம்ஜான் நோன்பிற்கு அரிசி வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி அச்சத்தை உருவாக்கும் நாளாகவே இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரைச் சிறுபான்மையின மக்களை பாதுகாத்து வருகிறோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈவிகேஎஸ் இளங்கோவனை 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் - கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

Last Updated : Jan 29, 2023, 5:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details