மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த பிரபாகரன் (28) என்பவர் தனது தாயுடன் அந்தியூர் அருகே உள்ள காட்டூரில் வசித்து வந்தார். இவர் சென்னம்பட்டி வனப்பகுதியில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அந்தியூர் வனத்துறை ஊழியர்கள், அந்தியூர் அருகே உள்ள கொம்புதூக்கி அம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது வனக்காப்பாளர் பிரபாகரன் சடலமாக கிடந்துள்ளார். உடனே இதுகுறித்து பர்கூர் காவல்துறையினருக்கு வனத்துறையின் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டது.
![in article image in article image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10746041_ero-g.jpg)
இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வனக்காப்பாளர் பிரபாகரன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், வனக்காப்பாளர் பிரபாகரன் தனக்கு அடிக்கடி பணியிட மாறுதல் வழங்கியது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறி வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.