ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலை வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. இப்பகுதியில் சிலர் உரிமம் பெறாத கள்ளத் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு வன விலங்குகளை, உணவுக்காக வேட்டையாடி வருவதாகவும் மாவட்ட எஸ்பி. சக்திகணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
வன விலங்குகளை வேட்டையாடிய மூன்று பேர் கைது! - ஈரோடு
ஈரோடு: அந்தியூர் அருகே வன விலங்குகளை வேட்டையாடிய மூன்று பேர் கள்ளத் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டனர்.

அவரது உத்தரவின் பேரில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து வேட்டையாடும் கும்பலை தீவிரமாக கண்காணித்து வந்தனர். கடந்த 15 நாட்களிள் வேட்டையாடும் கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 9 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு மூன்று துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் மலையைச் சேர்ந்த மகேந்திரன்(25), மாதேஷ்(35), கோவிலூர் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி(45) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து மூன்று உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.