நீலகிரி: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அரசூர் கிராமத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்த சிலர் தங்கியிருந்தனர். இவர்கள் சந்தேகப்படும் படி நடந்து கொண்டிருந்ததால், மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர் அவர்களது உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில் புலித்தோல், புலிநகம், புலி எலும்புகள் சிக்கின. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பஞ்சாப்பை சேர்ந்த ரத்னா (40) மங்கல் (28) கிருஷ்ணன் (59), ராஜஸ்தானை சேர்ந்த ராம் சந்தர் (50) ஆகியோர் புலியை வேட்டையாடியது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்து புலி தோல் உள்ளிட்டவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட எடக்காடு அருகே அடர்ந்த வனப்பகுதியில் புலியை தாக்கி கொன்று புலி தோலை கடத்தியது தெரிய வந்தது. நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், உதவி வன பாதுகாவலர் சரவணன் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் நான்கு பேரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இவர்கள்