தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேர்மாளம் வனப்பகுதியில் காட்டு தீ: மின்சார துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கிய மலைகிராமங்கள் - காட

ஈரோடு: கேர்மாளம் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால், மலைக்கிராமங்களில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

Forest fire in Karmalam forest

By

Published : Mar 14, 2019, 2:56 PM IST

கேர்மாளம் வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ எரிந்து வருகிறது. இதில் மரம், செடி, கொடிகள் எரிந்து நாசம் ஆனது. இந்த காட்டுத் தீயால் வனப்பகுதி வழியாக அமைப்பக்கப்பட்டுள்ள மின்பாதை முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கெத்தேசால், பூதாளபுரம், காணக்கரை, காடட்டி, சுஜில்கரை, திங்களூர் போன்ற 15 க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் நேற்று காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் மின்சாரம் இல்லாமல் மலைகிராமங்கள் அவதி பட்டு வருகின்றனர். மின்சாரம் இல்லாததால் ஆழ்குழாய் மின்மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமலும் அவதிபட்டு வகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details