ஈரோடு அருகே ஊருக்குள் நுழைந்த ஒற்றை காட்டுயானை; ட்ரோன் மூலம் தேடும்பணி தீவிரம் ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண்யானை உக்கரம், விவசாய நிலங்கள் வழியாக ஒடையாக்கவுண்டம்பாளையம் கிராமத்துக்குள் புகுந்தது. அங்குள்ள விவசாய நிலங்களில் யானை நடமாடுவதை கண்ட விவசாயிகள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே வழிதவறி அந்த ஒற்றையானை, வாழைத்தோட்டம் வழியாக காசிபாளையம் குட்டைத்தோட்டம் பகுதியிலுள்ள கரும்புகாட்டில் தஞ்சமானது. அங்கு யானை இருப்பதாக அறிந்த 100-க்கும் மேலான கிராமமக்கள் இன்று (ஜன.6) யானையை காண்பதற்கு திரண்டனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர், பொதுமக்களை யானை இருக்கும் பகுதிக்கு செல்லவேண்டாம் எனவும்; அனைவரும் தங்களின் வீடுகளில் பாதுகாப்புடன் இருக்குமாறும் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக, யானையை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு காட்டிற்குள் விரட்டவும்; அதற்காக அதன் இருப்பிடத்தை தேடும்பணியிலும் வனத்துறையினர் உட்பட 100-க்கும் மேற்பட்ட வேட்டைத்தடுப்பு காவலர்கள், வனக்காவலர்கள் அப்பகுதியில் ட்ரோன் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: வள்ளுவரை செதுக்கி வாகை சூடிய புதுக்கோட்டை மாணவி அஞ்சனா ஸ்ரீ