ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் சாலையில் அரேப்பாளையம் பிரிவு வனத்தில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கோவிலான பிசில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உளள் 24 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வழிபட்டுவந்தனர். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி சிலையை வனத்துறையினர் அகற்றினர். இதற்கு கிராமமக்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
அகற்றிய சிலையை மீண்டும் ஒப்படைத்த வனத்துறை - Forest Department
ஈரோடு: வனத்துறையினர் அகற்றிய பிசில் மாரியம்மன் கோவில் சிலை, மீண்டும் கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் தலைமையில், பாஜக பழங்குடியின மக்கள் அணி சார்பில், ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே 40க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கோட்டாட்சியர் ஜெயராமன், டிஎஸ்பி சுப்பையா கிராம மக்களிடம் கருத்துகேட்ப்பு மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அகற்றபட்ட சிலையை மீண்டும் அதே இடத்தில் நிலை நிறுத்த வேண்டும் என மக்கள் கோட்டாட்சியர் ஜெயராமனிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் விசாரணை மேற்கொண்டு, மீண்டும் அதே வனப்பகுதியில் சிலையை வைக்க உத்தரவிட்டார். உத்தரவின்படி, அரேப்பாளையத்தில் தாளவாடி வட்டாட்சியர் ஜெகதீசன், வனச்சரக அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் சிலையை மீண்டும் மக்களிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து சாமி கற்சிலை நீர்நிலையில் சுத்தம் செய்து மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் என மக்கள் தெரிவித்தனர்.