ஈரோடு:தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டகாஜனூர், இரியபுரம், தர்மபுரம், திகினாரை கிராமப் பகுதிகளில் ஒற்றை காட்டு யானை தினமும் இரவில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மல்லப்பா என்பவரை மிதித்துக் கொன்றது.
இதையடுத்து வனத்துறை மூலம் ஆனைமலையில் இருந்து சின்னத்தம்பி மற்றும் ராஜவர்தன் என இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை தாளவாடி வனத்துறையினர் மற்றும் கும்கி யானையுடன் வந்த வனக்குழுவினர் இணைந்து இரவு நேரத்தில் கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானை வனப்பகுதியில் உள்ளதா என ரோந்து பணி மேற்கொண்டனர்.