ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் தோட்டத்தில் விவசாயப் பணிகளை செய்ய சென்றுள்ளார்.
அப்போது தோட்டத்தில் உள்ள டிரம்மை திறந்தபோது, 30 குட்டிகளுடன் 5அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அந்தியூர் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த வனத்துறையினர், டிரம்மில் குட்டிகளுடன் இருந்த கண்ணாடி விரியன் பாம்பினை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
30 குட்டிகளுடன் கண்ணாடி விரியன் பாம்பு உரிய நேரத்தில் தகவல் கொடுத்து கண்ணாடி விரியன் பாம்பினை பாதுகாத்த விவசாயி சந்திரமோகனை, வனத்துறையினர் பாராட்டினர்.
இதையும் படிங்க:வனப்பகுதியில் நடந்தே சென்று மக்களிடம் குறைகளைக் கேட்ட அமைச்சர் மா.சு