ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டத்தில் யானை, சிறுத்தை, புலி, மான்கள், மலைப்பாம்புகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனச்சாலையை கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் ஜீரஹள்ளி அடுத்த குன்னன்புரம் கிராம சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக சென்ற வாகனம் மோதியதில் மலைப்பாம்பு காயமடைந்த நிலையில், சாலையோரம் படுத்துக்கிடந்தது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த வனத்துறையினர் 12 அடி மலைப்பாம்பை பிடித்து பரிசோதனை செய்ததில், லேசான காயத்துடன் நல்ல ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து லேசான காயத்துக்கு மருந்துவ சிகிச்சை அளித்து மீண்டும் அங்குள்ள வனப்பகுதியில் விடுவிடுத்தனர். இதையடுத்து வனச்சாலையை அடிக்கடி விலங்குகள் கடப்பதால் கிராமமக்கள் மெதுவாகன கடந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
மலைப்பாம்புக்கு கிசிச்சை அளித்து மீண்டும் வனத்தில் விடுவித்த வனத்துறை இதையும் படிங்க:கனவில் பாம்பு வந்ததால் பரிகார பூஜை..! நாக்கை கடித்த பாம்பு..! ஈரோட்டில் விபரீதம்..!