தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானைகளின் அருகே சென்று செல்ஃபி - எச்சரிக்கும் வனத்துறை - எச்சரிக்கும் வனத்துறை

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே சாலையோரம் முகாமிட்ட காட்டு யானைகளின் அருகே சென்று ஆபத்தை உணராமல் புகைப்படம், செல்ஃபி எடுக்கும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

elephant
elephant

By

Published : Aug 4, 2021, 9:42 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்டப் பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.

சாலைகளில் முகாமிடும் யானைகள்

இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக உள்ளது.

காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் சுற்றி திரிவதோடு சாலையோரங்களில் முகாமிட்டபடி மூங்கிலை உட்கொள்கின்றன.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட்.04) ஆசனூர் அருகே காட்டுயானைகள் சாலையோரம் முகாமிட்டு மூங்கிலை உட்கொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் யானைகளைக் கண்டதும் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, காட்டு யானைகளின் அருகே சென்று ஆபத்தை உணராமல் செல்போன்களில் செல்ஃபி, புகைப்படங்கள் எடுத்தனர்.

காட்டுயானைகள் திடீரென மனிதர்களை தாக்கும் வாய்ப்பு உள்ளதை அறிந்தும் அதைப்பற்றி கவலைப்படாமல் வாகன ஓட்டிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது, அவ்வழியாக சென்றவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

வனத்துறையினரின் பாதகை

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று யானைகளின் அருகே செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தவர்களை எச்சரித்தனர்.

யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அருகே சென்று செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுக்கக்கூடாது என ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்தும் வாகன ஓட்டிகள் வனவிலங்குகளின் அருகே சென்று புகைப்படம் எடுப்பதாகவும்; இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மீண்டும் வனத்தில் ராஜநடை போடும் ரிவால்டோ... மறுவாழ்வு அளித்த தமிழ்நாடு வனத்துறை!

ABOUT THE AUTHOR

...view details