தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளி வாகனத்தை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகை மறுப்பா? - ஈரோடு பெண் கண்ணீர் மல்க கோரிக்கை! - விண்ணப்பங்கள் நிராகரிப்பு

magalir urimai thogai: ஈரோட்டில் நான்கு சக்கர வாகனம் இருப்பதால் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் வந்த குறுஞ்செய்தியால் மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர்.

நான்கு சக்கர வாகனம் இருப்பதாக மகளிர் உரிமைத்தொகை மறுப்பு
நான்கு சக்கர வாகனம் இருப்பதாக மகளிர் உரிமைத்தொகை மறுப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 10:40 PM IST

Updated : Oct 1, 2023, 11:01 PM IST

நான்கு சக்கர வாகனம் இருப்பதாக மகளிர் உரிமைத்தொகை மறுப்பு

ஈரோடு: திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தில் 1.6 கோடி மகளிர் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டு, 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம், விண்ணப்பதாரரின் கைப்பேசிக்குக் குறுஞ்செய்தியாக வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், ஈரோட்டில் நான்கு சக்கர வாகனம் இருப்பதால் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக, தமிழக அரசு தரப்பில் வந்த குறுஞ்செய்தியால் மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரியார் வீதியில் உள்ள காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில் அருகில், பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் வசித்து வருபவர் மாதேஸ்வரன். இவருக்கு வெங்கடேஷ்வரி என்ற மனைவி உள்ளார். கணவர் மாதேஸ்வரன் ஊதுபத்தி வியாபாரம் செய்து வரும் நிலையில், மனைவி வெங்கடேஷ்வரி வீட்டைப் பராமரித்து வருகிறார்.

இவர்களுடன் வெங்கடேஷ்வரியின் மாற்றுத்திறனாளி தங்கை அமுதா என்பரும் வசித்து வருகிறார். இவர்கள் அனைவரும் ஒரே ரேசன் அட்டையில், அரசு உதவிகளைப் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்வரி, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்காக, கடந்த ஜூலை 26-ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார்.

அதனை அடுத்து, கடந்த 21-ஆம் தேதி அரசு தரப்பிலிருந்து விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாகக் கூறி, அதற்கான காரணத்துடன் கைப்பேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. அதில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத காரணத்தால் தங்களது விண்ணப்பத்தை ஏற்க இயலவில்லை. காரணம்: குடும்பத்தில் சொந்த பயன்பாட்டுக்காக நான்கு சக்கர வாகனம் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட வெங்கடேஷ்வரி கூறுகையில், பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் வீடு, ஊதிப்பத்தி விற்கும் தொழில் என தங்களது வாழ்க்கையை வறுமையின் பிடியில் நடத்தி வரும் தங்களிடம் நான்கு சக்கரத்தில் இருப்பது மாற்றுத்திறனாளி தங்கை பயன்படுத்தும் இருச்சக்கர வண்டி தான் எனக் குமுறுகிறார். மேலும், இதுபோன்ற முறையற்ற காரணங்களால் நிராகரிக்கப்படும் ஆவணங்கள் குறித்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது அந்த குடும்பம்.

இதையும் படிங்க:காவிரி விவகாரம்; அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்- ஈபிஎஸ் வலியுறுத்தல்

Last Updated : Oct 1, 2023, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details