ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பள்ளிகள் அருகே செயல்படும் கடைகளில் கேடு விளைவிக்கக்கூடிய சிகரெட், பீடி, பான் பராக், புகையிலை மற்றும் காலாவதியான பிஸ்கட் விற்கப்படும் கடைகளில் சத்தியமங்கலம் வட்டாட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 20க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 25 கிலோ சிகரெட், பீடி, புகையிலைகள், காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள், உணவுப் பண்டங்கள் பறிமுதல் செய்தனர்.