ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லிகை, முல்லை, கோழிக்கொண்டை, சம்பங்கி பூ அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. சுமார் 25,000 ஏக்கர் நிலப்பரப்பில் உற்பத்திசெய்யப்படும் பூ சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர் சங்கத்தில் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
பல்வேறு இடங்களிலிருந்து வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடகாவிலிருந்து வியாபாரிகள் முகாமிட்டு பூவை கொள்முதல் செய்தனர். ரூபாய் 50-க்கு விற்கப்பட்ட கோழிக்கொண்டை பூ தற்போது கிலோ ஆயிரமாக உயர்ந்துள்ளது. பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பங்கிப்பூ ரூபாய் 140 ஆக அதிகரித்துள்ளது. ரூபாய் 300-க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ தற்போது 1,500 ஆகும். 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லை 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.