ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை மற்றும் சம்பங்கிப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் பூக்களை பறித்து சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர் சங்கத்தில் வியாபாரிகள் முன்னிலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், வெயில் தாக்கம் குறைந்ததோடு, இரவு நேரங்களில் பனிப்பொழிவதால் பூக்களின் உற்பத்தியானது வெகுவாக பாதிக்கப்பட்டது. தினந்தோறும் 10 டன் மல்லிகைப்பூக்கள் வரத்தகமாகி வந்த நிலையில், தற்போது அரை டன்னாகவும், சம்பங்கி 1 டன்னாகவும் சரிந்தது.