கரோனா அச்சுறுத்தல் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவால் பூக்கள் விலை கடுமையாக சரிந்தது மட்டுமின்றி பூக்களை வாங்க வியாபாரிகள் எவரும் முன்வரவில்லை. சத்தியமங்கலம் வட்டாரத்தில் மட்டுமே 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லி, முல்லை, சம்பங்கி சாகுபடி செய்யப்படும் நிலையில் தினந்தோறும் பறிக்கப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பூக்களை குட்டையில் கொட்டிய விவசாயிகள் - விவசாயிகள் சோகம்
ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் விளையும் பூக்களை வாங்க எவரும் முன்வராததால் பூக்களை பறித்து விவசாயிகள் குட்டையில் கொட்டி வருகின்றனர்.
![பூக்களை குட்டையில் கொட்டிய விவசாயிகள் பூக்களை குட்டையில் கொட்டிய விவசாயிகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6528782-thumbnail-3x2-tri.jpg)
பூக்களை குட்டையில் கொட்டிய விவசாயிகள்
பூக்களை குட்டையில் கொட்டிய விவசாயிகள்
பூக்களை செடியில் பறிக்காமல் விட்டால் பூ மொட்டில் புழு ஏற்பட்டு அந்த செடியே நோயால் பாதிக்கப்படும். அதனால் தினந்தோறும் பறிக்கப்படும் பூக்கள் கிலோவுக்கு ரூ.8 வரை கூலி வழங்கப்படுகிறது. இதனால் கூலி வழங்கி அதனை பறித்து அங்குள்ள குட்டையில் கொட்டுகின்றனர். இதனால் தினந்தோறும் விவசாயிகளுக்கு குறைந்தபட்டசமாக ரூ.4500 வரை இழப்பீடு ஏற்படுகிறது.
இதையும் படிங்க: சிறு, குறு தொழில்களுக்கு புதிய சலுகைகள் - முதலமைச்சர்