ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வனப்பகுதியை உள்ளடக்கிய இந்த மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடர்மழை பெய்துவருகிறது.
இந்நிலையில் தாளவாடி வனப்பகுதியைச் சுற்றியுள்ள சிக்கள்ளி, சூசைபுரம், திகினாரை, ஜீரகள்ளி, மல்லன்குழி, நெய்தாளபுரம் ஆகிய பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, மலைப்பகுதியிலுள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன் மூலம் அப்பகுதில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதனால், விவசாயிகள் மகிச்சியடைந்துள்ளனர்.