ஈரோடு:அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட, கொம்பு தூக்கி அம்மன் கோயில் வனப்பகுதியில் நேற்று(நவ.28) கனமழை பெய்தது. காற்றாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில், இன்றும் அதிகாலை கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக கொம்பு தூக்கி அம்மன் கோயில் பள்ளத்தில் இரண்டாவது நாளாக காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது .
ஈரோடு கொம்பு தூக்கி அம்மன் கோயில் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம்! - heavy rain at Erode District Andhiyur Forest
வனப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக இரண்டாவது நாளாக கொம்பு தூக்கி அம்மன் கோயில் பள்ளத்தில் காற்றாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

அதிக அளவு பள்ளத்தில் தண்ணீர் சென்றதன் காரணமாக நகலூர் அருகே உள்ள வனத்து சின்னப்பர் கோவில் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்துச் சென்றது. இதன் காரணமாக கரும்பாறை தோட்டம் மற்றும் கொம்பு தூக்கி அம்மன் கோவில் ஆகிய இரண்டு கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியது. காற்றாற்று வெள்ள நீர் ஆனது நகலூர், கொண்டயம்பாளையம், அத்தாணி வழியாக பவானி ஆற்றில் கலப்பது குறிப்பிட்டதக்கது.
இதையும் படிங்க:6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்