தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடமுழுக்கு நடைபெறவிருந்த கோயிலில் புகுந்த வெள்ளநீர்..! - குடமுழுக்கு

ஈரோடு அருகே குடமுழுக்கு நடைபெறவிருந்த கோயிலில் வெள்ளநீர் புகுந்ததால் பணிகள் தடைபட்டன.

கோயிலில் புகுந்த வெள்ளநீர்
கோயிலில் புகுந்த வெள்ளநீர்

By

Published : Oct 21, 2022, 10:30 PM IST

ஈரோடு:வெள்ளோடு பள்ளபாளையம் கிராமத்தில் சடையப்ப சாமி மற்றும் கருப்பணசாமி கோயில் உள்ளது. குடமுழுக்கு விழாவிற்காக சாமி சிலைகள் புனரமைக்கப்பட்டன.

வரும் 28 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், நேற்றிரவு (அக. 20) பெய்த கனமழையால் வெள்ளநீர் கோயிலுக்குள் புகுந்தது.

குடமுழுக்கு நிகழ்வுக்காக அமைக்கப்பட்ட யாகசாலை உள்ளிட்டவை சேதமாகின. இதனால் பணிகள் தடைப்பட்டுள்ளன. வெள்ளம் வடிந்த பிறகு குடமுழுக்கு நடத்தப் பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details