தமிழ்நாட்டில் மிகப்பெரிய இரண்டாவது மண் அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில், இன்று (ஆக.14) காலை 5 மணி அளவில் 102 அடியை எட்ட உள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படவுள்ளது.
பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - ஈரோடு மாவட்ட செய்திகள்
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கபட உள்ளதால் பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Flood warning issued for Bhavani coastal people
மேலும், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. பவானி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர், சத்தியமங்கலம், பவானி ஆகிய பகுதியில் தாழ்வான இடங்களில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.