தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானி சாகர் அணையில் வெள்ளபெருக்கு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! - பவானி சாகர் அணையில் வெள்ளபெருக்கு

ஈரோடு: பவானி சாகர் அணையில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Flood warning Bhavani river
Flood warning Bhavani river

By

Published : Dec 3, 2019, 8:23 AM IST

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த நவம்பர் 8ஆம் தேதி அதன் முழுகொள்ளளவான 105 அடியை எட்டியது. தொடர்ந்து 23 நாள்களாக அணை முழுகொள்ளளவுடன் நீடித்து வந்த நிலையில், பில்லூர் அணைக்கு வரும் உபரிநீர், காரமடை பள்ளம், கொடநாடு வெள்ளநீர் பவானிசாகர் அணைக்கு வந்து கலந்ததால் அணைக்கு நீர்வரத்து 26,500 கனஅடியாக அதிகரித்தது.

இதனால், அணையில் இனி தண்ணீரை தேக்கி வைக்க இயலாத நிலையில், அணைக்கு வரும் உபரிநீரான 26,500 கனஅடி நீரை அணையில் இருந்து மேல்மதகு வழியாக ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அணையின் மேல்மதகில் உள்ள ஒன்பது மிகைநீர் போக்கி வழியாக பவானிஆற்றில் திறந்துவிட்டப்பட்ட தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இதன் காரணமாக, பவானிஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளநீரால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவர் என்பதால் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே சத்தியங்கலம் நகராட்சி, ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகமாக வரும் நிலையில் வருவாய், உள்ளாட்சி, நகராட்சி துறைக்கு அவ்வவ்போது தகவல் தெரிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:

வராக நதியில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details