தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடிப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கொடிவேரி அணை... - பவானி

பவானி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் சுற்றுலா பயனிகளின் நலன் கருதி கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயனிகள் வர பொதுபணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.

ஆடிப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் இன்றி  பொலிவிழந்த கொடிவேரி அணை
ஆடிப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் இன்றி பொலிவிழந்த கொடிவேரி அணை

By

Published : Aug 3, 2022, 2:32 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் ஆடி 18 ஆன இன்று (ஆக.3) பொதுமக்கள், முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் அங்குள்ள பவானி ஆற்றில் குளித்தும் தர்பணம் செய்தும், அங்குள்ள கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயனிகள் தங்கள் குடும்பத்துடன் அணையில் குளித்தும்,பரிசல் பயனம் மேற்கொள்வது வழக்கம். ஆனால், தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பவானிசாகர் அணை நிரம்பி அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஆடிப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் இன்றி பொலிவிழந்த கொடிவேரி அணை

பவானி ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் வர பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும் அணையை சுற்றிலும் பங்களாபுதூர், கடத்தூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொடிவேரி அணை ஆடிப்பெருக்கான இன்று களையிழந்து காணப்பட்டது.

இதையும் படிங்க:நீர்வரத்து 1,45,000 கன அடியாக உயர்வு - ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு

ABOUT THE AUTHOR

...view details