ஈரோடு:அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொம்பு தூக்கி அம்மன் கோயில் வனப்பகுதியில் நேற்று (அக்.19) கனமழை பெய்துள்ளது. இதனால் இக்கோயிலின் பள்ளத்தில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் பள்ளத்தில் அதிகளவு நீர் சென்றதால், வனத்து சின்னப்பர் கோயில் அருகே உள்ள உள்ள தரைப்பாலம் மூழ்கியது.
அந்தியூர் வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்
அந்தியூர் அருகே பெய்த கனமழை காரணமாக தீடீரென வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
அந்தியூர் வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்
பின்னர், சுமார் ஒரு மணி நேரமாக அவ்வழியாக சென்ற வெள்ள நீர், தரைப்பாலத்தைக் கடந்து வடிந்தது. தொடர்ந்து இந்த வெள்ள நீர், நகலூர், கொண்டயம்பாளையம் மற்றும் அத்தாணி வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது.
இதையும் படிங்க:கொள்ளிடம் வெள்ளப்பெருக்கு: படகுகள் மூலம் பயணிக்கும் கிராம மக்கள்