ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்தவுள்ள சித்தன்குட்டை பகுதியில் விவசாயிகள் மோட்டார் மூலம் நீர் இறைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதற்காக நீர்த்தேக்கப் பகுதியில் சிறிய அளவிலான குழிவெட்டியில், குழாய் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். அந்நீர்த் தேக்கத்தில் வெளியூர் இளைஞர்கள் குளித்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கோவை மாவட்டம் அன்னூர் கணேசபுரத்தைச் சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் பிரனேஷ், ரகுராம், யஸ்வந்த், கதிரேசன், சுரேஷ்ராஜ் ஆகியோர் இருசக்கர வாகனங்களில் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியான சித்தன்குட்டைக்கு சென்று, குளித்துக் கொண்டிருந்தனர்.