ஈரோடு:105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானி சாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் 104 அடியாகவும், நீர் இருப்பு 31.9 டிஎம்சி ஆகவும் உள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் அணை நீர்த்தேக்க பகுதியில் டன் கணக்கில் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனைக்காக ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணை நீர்த்தேக்க பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனர்.