தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் நிறுத்தம் - முதற்கட்ட தண்ணீர் திறப்பு நிறுத்தம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட முதல்சுற்று நீர் தற்போது நிறுத்தம்செய்யப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை
பவானிசாகர் அணை

By

Published : Feb 25, 2022, 5:09 PM IST

ஈரோடு:105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்திற்கு நீர் திறக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதியிலுள்ள ஒற்றைப்படை மதகுகள், சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் இரட்டைப்படை மதகுகள் பாசன பகுதியில் உள்ள ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 500 ஏக்கர் வேளாண் விளைநிலங்களில் புன்செய் பயிர்களான நிலக்கடலை, எள், சோளம் பயிரிடுவதற்காக விநாடிக்கு 2300 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது.

பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 30ஆம் தேதிவரை குறிப்பிட்ட இடைவெளிவிட்டு நான்கு சுற்றுகளாக நீர் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் முதல்சுற்று நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் இரண்டாம் சுற்று நீர் மார்ச் 4ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் எனப் பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 93.07அடியாகவும், நீர் இருப்பு 23.64 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 271 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து பாசனம், குடிநீர்த் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொதுத்தேர்வு தேதிகள் இன்று மாலை அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details