ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் 400க்கும் மேற்பட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஊரடங்கு காரணமாக சில மாதங்களாக தொழிற்சாலைகள் இயங்கவில்லை. அதையடுத்து தற்போது தளர்வுகளின் அடிப்படையில் அனைத்துத் தொழிற்சாலைகளும் குறைந்த உற்பத்தித் திறனுடன் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் வளாகத்தில் ஸ்பின்னிங் தொழிற்சாலையில் நேற்றிரவு மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் இருப்பு வைக்கப்பட்டிருந்த நூலில் பற்றி தீ மளமளவெனப் பரவியது. அதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் பெருந்துறை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.