தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராகி போரில் தீ விபத்து - விவசாயி வேதனை - erode fire accident

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் ஏற்பட்ட ராகிப்போர் தீவிபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான ராகி தீவனம் எரிந்து நாசமானது.

fire-accident-near-talawadi
fire-accident-near-talawadifire-accident-near-talawadi

By

Published : Mar 4, 2022, 10:30 PM IST

ஈரோடு : தாளவாடியில் உள்ள நேதாஜி வீதியை சேர்ந்தவர் சிக்கா (50). விவசாயியான இவர் 5 மாடுகளை வளர்த்து வருகிறார். மாடுகளின் தீவனத்துக்காக தன்னுடைய தோட்டத்தில் அறுவடை செய்த ராகி தட்டுகளை குவித்து வைத்திருந்தார். இந்நிலையில், இன்று (மார்ச் 4) திடீரென ராகி தட்டு போரில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காற்று பலமாக வீசியதால் அதன் பக்கத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த குன்னேகவுடா என்பவரது ராகி தட்டைலும் தீப்பிடித்து மள மளவென எரிந்தது.

ராகி போரில் தீ விபத்து

இதுகுறித்து, ஆசனூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பயிடத்திற்கு தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அனைத்து ராகி தட்டும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது. மாடுகளுக்கு தீவனமாக வைத்திருந்த ராகி தட்டுபோர் எரிந்து நாசமானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இதையும் படிங்க : பனிப்பொழிவு - பரவசமாக காட்சியளிக்கும் பத்ரிநாத் கோயில்

ABOUT THE AUTHOR

...view details