ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அயலூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னகுழி தாசில்தோட்டத்தில், மரம் ஏறும் தொழிலாளியான குமார் தன் தாய் வள்ளியம்மாளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இவர், மது போதையில் வீட்டிற்கு வந்து தனது தாயிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் குமாரின் தாய் கோபமடைந்து பக்கத்து வீட்டில் போய் படுத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து குமார் மட்டும் தனியாக அவரது குடிசை வீட்டில் உறக்கியுள்ளார். இந்நிலையில், அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம் எதிர்பாராவிதமாக குடிசையில் தீ பற்றியுள்ளது.
தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளிக்கு ஏற்பட்ட சோகம்!
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குடிசை வீட்டில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில், குடிசையினுள் தூங்கிக் கொண்டிருந்த மரம் ஏறும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
குடிசையில் தீ விபத்து ஏற்பட்டதைப் பார்த்து அலறியடித்து ஓடிவந்த குமாரின் தாயார், குமார் உடல் கருகி உயிரிழந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். வள்ளியம்மாளின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து, சிறுவலூர் காவல் துறைக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சிறுவலூர் காவல்துறையினரும், கிராம நிர்வாக அலுவலரும் குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.