தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் தீ விபத்து: பத்திரமாக மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபர்! - கோபிசெட்டிபாளையத்தில் தீ விபத்து

ஈரோடு: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் போது வீட்டினுள் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

தீ விபத்து
தீ விபத்து

By

Published : Oct 23, 2020, 10:01 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஒட்டர்கரட்டுப்பாளையம் காட்டுவலவில் வெங்கடாசலம் என்பவர் தனது ஓட்டு வீட்டின் முன்பகுதியில் மளிகைக்கடை நடத்திவருகிறார்.

இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட ஐயப்பன் (37) என்ற மகன் உள்ளார். இவர் வீட்டினுள் சென்று உள்தாழிட்டுக்கொண்டு வீட்டிற்கு தீவைத்துள்ளார்.

வெங்கடசலத்தின் வீட்டினுள் இருந்து புகை வெளியேறுவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து வீட்டினுள் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஐயப்பனை காயங்களின்றி உயிருடன் மீட்டனர்.

அதற்குள் தீ மளமளவென பரவி வீடு, மளிகைக் கடையில் பற்றி எரியத் தொடங்கியது. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நம்பியூர் தீயணைப்புத் துறைக்கும் கடத்தூர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அக்கம் பக்கம் வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்ததுடன் ஒரு மணிநேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.

இந்தத் தீவிபத்தில் வெங்கடாசலத்தின் வீட்டிருந்த வீட்டு உபயோகப்பொருள்கள், சொத்து ஆவணங்கள், துணிகள், மளிகைக் கடையில் இருந்த பொருள்கள் என சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இத்தீவிபத்து குறித்து கடத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details