ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஜீரஹள்ளி, மரியபுரம் வனப்பகுதியில் சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில், வனத்துறையினர் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனே அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.