தமிழ்நாட்டில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டு விவசாயிகள், வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 4) புஞ்சை புளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு நாட்டு மாடு, ஜெர்சி, சிந்து, கலப்பின வகை, கன்று குட்டிகள் என 450-க்கும் மேற்பட்ட மாடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்குக் கொண்டுவந்தனர்.
நாட்டு மாடு 50 ஆயிரம்முதல் 75 ஆயிரம் ரூபாய்வரையிலும், ஜெர்சி மாடு 23 ஆயிரம்முதல் 42 ஆயிரம் ரூபாய்வரையிலும், சிந்து, கலப்பின வகை மாடுகள் 20 ஆயிரம்முதல் 34 ஆயிரம் ரூபாய்வரையிலும் விலைபோயின.