ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் யானைகள், காட்டுப்பன்றிகள் ஆகியவை விவசாய நிலங்களில் புகுந்து மக்காச்சோளம், ராகி, கரும்பு, முட்டைகோஸ் போன்ற பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.
இதனால் வனவிலங்குகள் புகாதபடி விவசாயிகள் தோட்டத்தைச் சுற்றிலும் பேட்டரியால் இயங்கும் மின்வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர். இந்நிலையில், இக்கலூரைச் சேர்ந்த மாதேவசாமி என்பவர் தோட்டத்தில் யானைகள் புகுந்து, மக்காசோளப் பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது.
இதனால் தோட்டத்தில் சுற்றிலும் போடப்பட்டிருந்த மின்வேலியில் உயர் அழுத்த மின்சாரத்தை பாய்ச்சியிருந்ததால், இன்று (நவ.26) அதிகாலை மக்காச்சோளப் பயிரை திண்பதற்கு வந்த பெண் யானை, இந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது. பின்னர், இது குறித்து அக்கிராம மக்கள் வனத்துறையிருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.