தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் மின்வேலியில் சிக்கிய யானை உயிரிழப்பு - farmer was arrest by forest officers

ஈரோட்டில் விவசாயத் தோட்டம் அருகே யானை உயிரிழந்த கிடந்த விவகாரத்தில் விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பெண் யானை உயிரிழப்பு
பெண் யானை உயிரிழப்பு

By

Published : Dec 11, 2022, 10:11 PM IST

ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிக்கு அருகே உள்ள தாளவாடியின் ஜீரகள்ளி, மல்லன்குழி பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. 2 நாட்களுக்கு முன் மல்லன்குழி கிராமத்தில், மாதேவா என்பவரின் தோட்டத்தின் அருகே காட்டு யானை உயிரிழந்து கிடந்தது.

இதுகுறித்து விவசாயிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், இறந்தது சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பதை உறுதி செய்தனர். உடல் நலக்குறைவால் யானை இறந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என அறிய கால்நடை மருத்துவர்களை கொண்டு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

பிரேத பரிசோதனையில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், விவசாயி மாதேவா தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின் வேலியில் யானை சிக்கி உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயி மாதேவனை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி..? முதலமைச்சர் முடிவு..!

ABOUT THE AUTHOR

...view details