இது புதுசா இருக்கே... வீடியோ காலில் விநாயகரை வழிபட்ட பெண்! ஈரோடு:தமிழ்நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் ஒரு முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஊரெங்கும் பந்தலிட்டு அதில் முக்கால் அடி முதல் 70 அடி வரையிலான சிலைகளை வைத்து வழிபடுவார்கள். விநாயகரின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த திருவிழா கிட்டத்தட்ட 3 முதல் 5 நாட்கள் வரை நடைபெரும்.
பின்னர் அருகில் உள்ள நீர்நிலைகளில் கொண்டு சென்று மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை கரைப்பது வழக்கம். இது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். வட மாநிலங்களில் சுமார் 10 நாட்கள் வரை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள விநாயகர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.
அப்போது ஒரு பக்தர் தனது செல்போனில் வீடியோ கால் மூலம் அவரது வீட்டில் இருந்த பெண் சாமி தரிசனம் செய்யும் வகையில் விநாயகரின் முன்பு செல்போனை பிடித்தபடி காட்டினார். செல்போன் வீடியோ காலில் தோன்றிய பெண் விநாயகரை வீட்டில் இருந்த படியே வழிபட்டார். தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்த இந்த யுகத்தில், பெண்கள் வீட்டில் இருந்தபடியே வீடியோ காலில் சாமி தரிசனம் செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளது என அங்கிருந்த மற்ற பக்தர்கள் பேசிக் கொண்டனர். மேலும் சில பக்தர்கள் இந்த செயலை கண்டு வியப்படைந்தனர்.
இதையும் படிங்க: 12 அடி நீள ராஜநாகம்... பயணிகள் பீதி... பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்