ஈரோடு:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரமான கே.என். பாளையம், தாச கவுண்டன்புதூர், கொடிவேரி, பவானிசாகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நேந்திரம் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, நேந்திரம் வாழை கிலோ 6 ரூபாயாக சரிந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்துப் பேசிய வாழை விவசாயி செல்லப்பன், "12 மாத பயிரான வாழை நேந்திரத்தை உற்பத்தி செய்வதற்கு கிலோ 15 ரூபாய் வரை செலவாகிறது. விஷேச நாள்களில் வாழை கிலோ ரூ. 40வரை விற்கப்பட்டது. தற்போது, சொட்டுநீர் பாசனம் மூலம் நேந்திரம் வாழை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், அதன்விலை உற்பத்தி செலவைக்கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.