ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற 14ஆவது தேசிய பாரம்பரிய நெல் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் 40க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல்விதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அந்த நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் இயற்கை வேளாண் வழியில் நஞ்சில்லா உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் கிரியேட் நமது நெல்லைக் காப்போம் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற 14ஆவது ஆண்டு தேசிய நெல் திருவிழாவின் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் பாரம்பரிய விதை நெல் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் காட்டுயாணம், மாப்பிள்ளைசம்பா, கருப்புகவுணி, தூயமல்லி, சீரகசம்பா இலுப்பைபூசம்பா, சொர்ணமசூரி, ஆத்தூர்கிச்சலி சம்பா, கருங்குருவை பவானி, காலம் நமக்கு உள்பட 174 பாரம்பரிய நெல் விதைகள் காட்சிப்படுப்பட்டன. விழாவிற்கு வந்திருந்த விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் தலா இரண்டு கிலோ வழங்கப்பட்டது. இந்த இரண்டு கிலோ நெல் விதைகளை விவாயிகள் பயிர் செய்து அடுத்தாண்டு நடைபெறும் நெல் திருவிழாவில் நான்கு கிலோவாக திரும்பி தரும் வகையில் சங்கிலி தொடர் திட்டமும் அமுல்படுத்தப்பட்டது.